ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள் |
![]() இப்போது இதற்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தின் மியூசிக் இணையமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த இணையம் கூகுள் மியூசிக் என அழைக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் மியூசிக் கோப்புகளுக்கென லட்சக்கணக்கில் அதனையே சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ஆப்பிள் நிறுவனம் எனக்கு வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு இப்போது கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் ஒரு இடத்தை அளிக்கிறது. முதலில் தன்னுடைய கூகுள் ப்ளஸ் தளத்துடன், கூகுள் மியூசிக் தளத்தினையும் இணைக்க கூகுள் திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது தனியே இதனை வடிவமைத்துள்ளது. கூகுள் சர்ச், கூகுள் ப்ளஸ், கூகுள் மேப்ஸ் போன்ற தேடுதல் தளங்களுடன் இந்த கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளமும் இணைக்கப்படும். தேடல்களில் பாடல்கள் சார்ந்த தகவல்கள் தேடப்பட்டால் மியூசிக் கோப்புகள் குறித்த தகவல்களும் காட்டப்படும். எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட இசைக்குழு குறித்த அல்லது பாடல்கள் குறித்த தகவல்களைத் தேடினால், கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளத்தில் அவை பதியப்பட்டிருக்கும் பாடல்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த தளத்தில் இருந்து அந்த பாடல் தரவிறக்கம் செய்யப்படும் அளவிற்கு இணைப்பும் தரப்படும். இதனால் கூகுளின் மற்ற சேவைகளுடன் மியூசிக் ஸ்டோர்ஸ் சேவையும் இணைந்தே கிடைக்கும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தன் தளத்திற்கு இழுத்துவிடலாம் என்று கூகுள் எண்ணுகிறது. |
Sunday, December 4, 2011
ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள்
ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு
ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு |
![]() இந்த மென்பொருளின் மூலம் கணணியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணணியின் செயல்திறனை அதிகரிக்கலாம். முந்தைய பதிப்பினை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், விரைவான தொடக்க வசதிகளும் கொண்டுள்ளது. DEEP ஸ்கேன் வசதி மூலம் சுமார் 5 - 10 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது. அத்துடன் புதிய USER INTREFACE மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ACTIVE BOOST செயல்பாடு, ஸ்கின் மாற்றியமைக்கும் வசதி என பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. |
மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம்
மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் |
![]() மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக்கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதன் இடைமுகம்(User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status). Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும். எதாவது தேடிப் பெறப்பட்ட விடயத்தை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendation களை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும். தேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம். Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட விடயம் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts. வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அடோப் பிளாஷ் மென்பொருளின் உதவி தேவைப்படாது. இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது. |
Friday, December 2, 2011
புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு
![]() தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம். |
Subscribe to:
Posts (Atom)