WEL COME TO NEW TECHNO VISIONVISION

Sunday, December 4, 2011

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள்

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கென ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையத்தளத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் கோப்புகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் தரவிறக்கம் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது.
இப்போது இதற்குப் போட்டியாக கூகுள் நிறுவனத்தின் மியூசிக் இணையமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த இணையம் கூகுள் மியூசிக் என அழைக்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் மியூசிக் கோப்புகளுக்கென லட்சக்கணக்கில் அதனையே சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் எனக்கு வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு இப்போது கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் ஒரு இடத்தை அளிக்கிறது.
முதலில் தன்னுடைய கூகுள் ப்ளஸ் தளத்துடன், கூகுள் மியூசிக் தளத்தினையும் இணைக்க கூகுள் திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது தனியே இதனை வடிவமைத்துள்ளது.
கூகுள் சர்ச், கூகுள் ப்ளஸ், கூகுள் மேப்ஸ் போன்ற தேடுதல் தளங்களுடன் இந்த கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளமும் இணைக்கப்படும். தேடல்களில் பாடல்கள் சார்ந்த தகவல்கள் தேடப்பட்டால் மியூசிக் கோப்புகள் குறித்த தகவல்களும் காட்டப்படும்.
எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட இசைக்குழு குறித்த அல்லது பாடல்கள் குறித்த தகவல்களைத் தேடினால், கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளத்தில் அவை பதியப்பட்டிருக்கும்
பாடல்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த தளத்தில் இருந்து அந்த பாடல் தரவிறக்கம் செய்யப்படும் அளவிற்கு இணைப்பும் தரப்படும்.
இதனால் கூகுளின் மற்ற சேவைகளுடன் மியூசிக் ஸ்டோர்ஸ் சேவையும் இணைந்தே கிடைக்கும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தன் தளத்திற்கு இழுத்துவிடலாம் என்று கூகுள் எண்ணுகிறது.

ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு

ADVANCED SYSTEM CARE: கணணியை பாதுகாப்பதற்கு

கணணியினை பாதுகாத்து அதனது செயல்திறனை அதிகரிக்க செய்யும் சிறந்த மென்பொருளான ADVANCED SYSTEM CARE மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பான 5 அண்மையில் வெளிவந்துள்ளது.
இந்த மென்பொருளின் மூலம் கணணியில் உள்ள கோப்புக்களை சுத்தம் செய்து தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணணியின் செயல்திறனை அதிகரிக்கலாம்.
முந்தைய பதிப்பினை விட அதிக செயல்திறன் கொண்டதாகவும், விரைவான தொடக்க வசதிகளும் கொண்டுள்ளது. DEEP ஸ்கேன் வசதி மூலம் சுமார் 5 - 10 நிமிடங்களுக்குள் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளது.
அத்துடன் புதிய USER INTREFACE மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ACTIVE BOOST செயல்பாடு, ஸ்கின் மாற்றியமைக்கும் வசதி என பல மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம்

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன.
மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர்.
மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக்கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
இதன் இடைமுகம்(User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).
Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும்.
எதாவது தேடிப் பெறப்பட்ட விடயத்தை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendation களை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும்.
தேடுதலுக்கு பிங் சேவை(Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம், Like செய்யலாம், Tag செய்யலாம்.
Tagging: நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட விடயம் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விடயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts.
வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அடோப் பிளாஷ் மென்பொருளின் உதவி தேவைப்படாது.
இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல Groups போன்றவை இல்லை.
இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

Friday, December 2, 2011

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு



புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும்.
தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.

Monday, November 28, 2011

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

பென்டிரைவை RAMஆக பயன்படுத்துவதற்கு

நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில்  பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்.

ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு

கணணி செய்தி
ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு

கூகுள் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது.
அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் மின்னஞ்சலை பார்க்க முடியாமல் போகலாம்.
அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் போட முடியாமல் போய்விடும். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும்.
நீங்கள் எப்பொழுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் தொழில் ரீதியான மின்னஞ்சலாக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான் ஜிமெயிலின் Vacation Responder வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியை சேமித்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் நீங்கள் இல்லாத சமயத்தில் வரும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் Automatic பதில் அனுப்பி விடும். இதனால் மின்னஞ்சல் அனுப்பிவரும் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
Vacation Responder வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
அடுத்து Options ==> Mail Settings பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு வரும் விண்டோவில் Vacation Responder என்ற வசதி பகுதிக்கு செல்லவும்.
அதில் On என்பதை கிளிக் செய்து Message என்ற பொக்சில் நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு போய் சேர வேண்டிய பதிலை Type பண்ணவும். பின் Only Send a Response to people in my contacts என்பதை கிளிக் செய்து Save Changes கொடுக்கவும்.
First Day - நீங்கள் மின்னஞ்சல் பார்க்க முடியாமால் போகும் திகதி.
Ends - இந்த வசதியை நிருத்தப்படவேண்டிய நாள்.
பிறகு அந்த கட்டத்தில் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்தால் உங்கள் மின்னஞ்சல் Contact List ல் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் Automatic Reply Email அனுப்பப்படும். வேறு மின்னஞ்சல்களுக்கு வந்தால் Automatic Reply அனுப்பாது.
அனைத்தும் தெரிவு செய்த பின்னர் கீழே உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். அதற்க்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கத்தில் இருக்கும்.
திரும்ப வந்து இதில் உள்ள Endnow லிங்கை அழுத்தினால் இந்த வசதி Off ஆகிவிடும்.

Saturday, November 26, 2011

Facebook Profile Tab இல் இணைப்பது எவ்வாறு?

Facebook Profile Tab இல் இணைப்பது எவ்வாறு?

Facebook Profile Tab இல் Facebook Application ஐ இணைக்கும் இவ்வசதியினை Facebook தற்போது இடைநிறுத்தியுள்ளது. இதற்கு மாற்றீடாக Facebook Home இன் இடப்பக்கத்திலுள்ள Application களின் Bookmark இலிருந்து உங்களது Facebook Application களினை நீங்கள் இலகுவாக உபயோகிக்க முடியும் என Facebook பரிந்துரைக்கிறது. 

இன்றைய சிந்தனையை இதுவரை Facebook Profile Tab இல் இணைக்காதவர்கள் இணைக்கும் முறை:
  1. http://apps.facebook.com/thoughtsoftheday/ இற்குச் செல்லவும்.
  2. Add Profile Tab பொத்தானை அழுத்தவும்.
  3. காட்சியளிக்கும் Dialog Box இலுள்ள Add Profile Tab பொத்தானை மீண்டும் அழுத்தவும்."Add Profile Tab" Dialog Box
  4. மீண்டும் காட்சியளிக்கும் Dialog Box இல் Go To My Profile பொத்தானை அழுத்துவதன் மூலம் இன்றைய சிந்தனை உங்களது Facebook Profile Tab இல் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்."Profile Tab Added" Dialog Box
w3தமிழ் விசைப்பலகையை இதுவரை Facebook Profile Tab இல் இணைக்காதவர்கள் இணைக்கும் முறை:
  1. http://apps.facebook.com/wwwtamil/ இற்குச் செல்லவும்.
  2. Add Profile Tab பொத்தானை அழுத்தவும்.
  3. காட்சியளிக்கும் Dialog Box இலுள்ள Add Profile Tab பொத்தானை மீண்டும் அழுத்தவும்.
  4. மீண்டும் காட்சியளிக்கும் Dialog Box இல் Go To My Profile பொத்தானை அழுத்துவதன் மூலம் w3தமிழ் விசைப்பலகை உங்களது Facebook Profile Tab இல் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Facebook Profile Box இற்குப் பதிலாக  Bookmark அல்லது Profile Tab வசதியினை உபயோகித்து உங்களது Facebook செயலிகளை இலகுவாக உபயோகிக்க முடியும். Facebook ஆனது Profile Box இனை நீக்கவுள்ளது தொடர்பான குறிப்புகள்:
  • http://www.facebook.com/help/?page=1150
  • http://developers.facebook.com/blog/post/399?ref=mf